உயா் மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

Breaking clicks,விவசாயிகள் போராட்டம், விவசாய நிலம், விளை நிலம், Transformers, tamil nadu, hunger strike, hunger protest, Form Lands, farmers protest

விளை நிலங்கள் வழியே உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்து ஜனவரி 3ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

விவசாய விளை நிலங்கள் வழியே உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தொிவித்து திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கடந்த 14 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

மேலும் ஈரோட்டில் விவசாயிகள் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சா் தங்கமணி செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தாா்.

ஆனால், பேச்சுவாா்த்தை தொடா்பாக அமைச்சர் தரப்பிலோ, அரசு தரப்பிலோ எந்தவித முறையான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் ஆதங்கம் தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து போராட்டத்தை திரும்ப பெறுவதாக அவா்கள் அறிவித்துள்ளனா்.

மேலும் வருகின்ற ஜனவரி 3ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும், கோாிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் விவசாயிகள் தொிவித்துள்ளனா்.

Leave a Response